எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2018 11:01
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா நடந்தது. நேற்று காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5:00 மணிக்கு சன்னதியை அடைந்த பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார்.
*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, மண்டபத்தில் சேர்க்கையாகினார். தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாள் மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.