பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
ஈரோடு: பொட்டு அம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமானோர் பொங்கல் வைத்த வைத்து வழிபட்டனர். ஈரோடு, திருவள்ளுவர் வீதியில் எழுந்தருளியுள்ள, பொட்டுசாமி, கன்னிமார் மாரியம்மன், கருப்பண்ணசாமி, மதுரைவீரன் திருக்கோவில், 24வது பொங்கல் திருவிழா கடந்த, 23ல் பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து, காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் மேகநாதன் தலைமையில், ஏராளமான பக்தர்கள், தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நேற்று அதிகாலை காவிரி தீர்த்தத்திலும், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், போன்ற திரவியங்கள் மூலம், மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. பின்னர், மூலவர் திருச்செந்தூர் அலங்காரத்திலும், சந்தனக்காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளுவர் வீதி, வாசுகி வீதியை சேர்ந்த பெண்கள் பலர், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று காலை மதுரை வீரன் பூஜை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.