பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
பழநிக்கு திருஆவினன்குடி என்னும் பெயர் ஏற்பட்டதற்கான வரலாறு பழநி தல புராணத்தில் இடம்பெற்றுள்ளது. விநாயகருக்கும், முருகனுக்கும் நடந்த போட்டியில் அம்மையப்பரே உலகம் என்று சிவபார்வதியைச் சுற்றி வந்த விநாயகர் பரிசாக மாங்கனியைப் பெற்றார். மயில் வாகனத்தில் உலகத்தை வலம் வந்த முருகன் தெற்கு நோக்கி புறப்பட்டு நெல்லிவனமான பழநி மலைப்பகுதியில் தங்கினார். அங்கு விஷ்ணுவின் மனைவியரான லட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன், அக்னிதேவன் ஆகியோர் முருகனின் அருளைப் பெறுவதற்காக தவ வாழ்வில் ஈடுபட்டு வந்தனர். அதனால் இத்தலம் திரு ஆவினன்குடி என்னும் பெயர் பெற்றது. இதில் திரு என்பது மகாலட்சுமியையும், ஆ என்பது காமதேனுவையும், இனன் என்பது சூரியனையும், கு என்பது பூமாதேவியையும், டி என்பது அக்னிதேவனையும் குறிக்கும். திருஆவினன்குடி கோவில் லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோருக்கு சன்னிதிகளும், அருகில் முருகனால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும் உள்ளன. ஆவினன்குடி அழகன் முருகனை தைப்பூச விழாவில் தரிசிப்போம். பழநி மலைக்கோயிலில் முருகன், நவபாஷாணத்தில் வடிவமைக்கப்பட்ட ஞான தண்டாயுதபாணி சுவாமியாக அருள்புரிகிறார்.
தினசரி ஆறுகால கட்டளை பூஜையில் அலங்கார விபரம்
1. விளாபூஜை-காலை 6:30 மணி - சாது, சந்நியாசி அலங்காரம்
2. சிறுகாலசந்தி-காலை 8:00 மணி - வேடர் அலங்காரம்
3. காலசாந்தி-காலை 9:00 மணி - பாலசுப்பிரமணியர்
4. உச்சிக்காலம்-மதியம் 12:00 மணி - வைதீகாள் அலங்காரம்
5. சாயரட்சை-மாலை 5:30 மணி - ராஜஅலங்காரம்
6. இராக்காலம்-இரவு 8:00 மணி - வெள்ளை சாத்துப்படி (புஷ்பாலங்காரம்)
(குறிப்பு: தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக் காலங்களில் நேரம் மாறுபடும்).
நிரந்த கட்டளை பூஜைகட்டண விபரம்:
1. ஆறுகால பூஜைகள் மற்றும் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட பூஜைகளில் நிரந்த கட்டளை கட்டணம் ரூ.10 ஆயிரம். அதுவே விழாக்காலங்களில் ரூ.15 ஆயிரம் மற்றும் நன்கொடை வழங்க வேண்டும். ஒரு கட்டளைக்கு இரண்டு பக்தர்கள் விரும்பும் ஒரு காலபூஜையில் அனுமதிக்கப்படுவார்கள். இதுபோக தினசரி கட்டளை காலபூஜையில் பங்கேற்க ரூ.900, இதுவே விழாக்காலங்களில் ரூ.1800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஞ்சாமிர்தம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. காலபூஜை தரிசனம் செய்ய ஒருநபருக்கு ரூ.150, விழாக்காலங்களில் ரூ.300ம் வசூலிக்கப்படுகிறது.
2. சுண்டல் கட்டளை ரூ. 500
3. அர்ச்சனை கட்டளை ரூ.2,000
4. பஞ்சாமிர்தக்கட்டளை ரூ.1500 செலுத்தினால், ஆண்டுதோறும் பக்தர்கள் விரும்பும் நாளில் அபிேஷகம், அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்படுகிறது