பதிவு செய்த நாள்
29
ஜன
2018
12:01
சேலம்:”கரூர், அமராவதி ஆற்றில், பழமையான கிரேக்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது,” என, சேலம், பாராமஹால் நாணயவியல் சங்க இயக்குனர் சுல்தான்தெரிவித்தார்.
ஆய்வு: சேலத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கரூர், அமராவதி ஆற்றில் மணல் எடுத்த போது, கரையின் ஒரு பகுதியில், கிரேக்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. அதை எடுத்த தொழிலாளியிடம் இருந்து, ஆய்வுக்கு பாராமஹால் நாணயவியல் சங்கம் சார்பில் வாங்கி வந்து, பாதுகாத்து வருகிறேன்.நாணயத்தின் முன்புறம் கிரீக் நாட்டு இளவரசி, மறுபுறம் மன்னர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. உலோகம், செம்பை கொண்டுள்ள இந்த நாணயம், 7.70 கிராம் எடை உள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள் மூலம், கி.மு., 320ம் ஆண்டு காலத்தில் நாணயம் புழக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது. இளவரசி தலைமுடி பின் விளிம்பில், கிரீக் எழுத்து, மன்னர் தலை இடது புறம், தலைக்கவசம் மீது, மூன்று எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. முழு வட்ட வடிவமின்றி, கைகளில் வெட்டி வடிவமைக்கப்பட்டதாக உள்ளது.
வல்லமை: இது, உலக வரலாற்றில் வல்லமை மிகுந்த நாகரிகமாக கருதப்படும் கிரேக்க நாகரிகத்துடன், தமிழகம் தொடர்பில் இருந்ததையே காட்டுகிறது. நாணயம் குறித்த விபரம், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த நினைப்பவர்கள், 94439 12804 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.