கச்சத்தீவு திருவிழா செல்லும் பக்தர்களில் குற்ற வழக்கு இருந்தால் அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2018 01:02
ராமநாதபுரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் முழுமையான ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். குற்றவழக்குகளில் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை, என ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., தெரிவித்தார். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் சர்ச் திருவிழா பிப்., 23, 24 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளன. இத்திருவிழாவிற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். இவர்கள் அனைவரும் முன் கூட்டியே தனது அடையாள அட்டை, முகவரி உட்பட அனைத்து தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதனை இந்திய துாதரக அலுவலகத்தில் அனுமதித்து அதற்கான பட்டியலை அனுப்புவார்கள். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். குற்ற வழக்குகளில் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படும். அவர்கள் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்பதை பார்ப்பதில்லை, என அவர் தெரிவித்தார்.