நெல்லையப்பர் கோயிலில் தீப வழிபாட்டுக்கு திடீர் தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2018 11:02
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறை கோயில்களில் குறிப்பிட்ட சன்னதிகளை தவிர மற்ற இடங்களில் கற்பூரம், விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர் ரோஷினி தெரிவித்தார். திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது.மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ சார்பில் கோயிலின் பழமையான சிற்பங்களை துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. கோயில் செயல்அலுவலர் ரோஷினி கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துசம்பவத்திற்கு பிறகு, நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதி, கொடிமரம், அம்மன் சன்னதி, சனீஸ்வரர் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில்மட்டுமே விளக்குகள் ஏற்றி வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களைதவிர மற்ற இடங்களில் தீப வழிபாட்டிற்கு தடை விதித்துள்ளோம் என்றார்.