பதிவு செய்த நாள்
07
பிப்
2018
11:02
திருப்பதி: திருமலையில், வரும், பிப்., 25ம் தேதி முதல், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.திருமலையில், மாசி பெளர்ணமியை ஒட்டி வருடாந்திர தெப்போற்வசம் நடக்க உள்ளது. அதன்படி, பிப்., 25ம் தேதி முதல் மார்ச், 1ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்கள் திருமலை திருக்குளத்தில் உள்ள தெப்பத்தில் உற்சவமூர்த்திகள் வலம் வர உள்ளனர். அதனால், தேவஸ்தானம், பிப்., 25, 26, 27, 28 மற்றும் மார்ச், 1 ஆகிய தேதிகளில், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.