பதிவு செய்த நாள்
07
பிப்
2018
12:02
ஓமலூர்: நாகர் கோவில் பண்டிகை, கோலாகலமாக நடந்தது. ஓமலூர், தொளசம்பட்டியில், நாகர், முத்துக்குமாரர் கோவில் பண்டிகை, நேற்று துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, நாகர், முத்துக்குமாரர் சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊர்வலம் சென்றனர். பின், கோவிலை சுற்றி, பொங்கல் வைபோகம் துவங்கியது. மாவிளக்கு வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப மகமேருவில், நாகர் எழுந்தருளி, ஊர்வலம் நடந்தது. இந்த விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, முத்துக்குமாரருக்கு அபி?ஷகம், மகா தீபாராதனை, நாளை மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், சிறுவர்கள் விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது.