பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
கண்டமங்கலம்: குமளத்தில் உள்ள ஸ்ரீநிவாசபெருமாள் கோவிலுக்கு, புதிய தேர் கரிக்கோல விழா நடந்தது. கண்டமங்கலம் அடுத்த குமளம் கிராமத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவின் தேர் சேதமடைந்ததால், புதிய தேர் அமைத்திட, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அமைச்சர் சண்முகம் முயற்சியின் பேரில், குமளம் கோவிலுக்கு திருத்தேர் செய்வதற்கு, 36 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. கடந்த 2013ம் ஆண்டு துவங்கி, 37 அடி உயர புதிய தேர் செய்து முடிக்கப்பட்டது. இந்த திருத்தேர் வெள்ளோட்டம், நேற்று காலை 9:45 மணிக்கு துவங்கியது. ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சரவணன், பி.டி.ஓ.,க்கள் ஜோதி, ஜெகதீசன் ஆகியோர் வடம் பிடித்து திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கினர். விழால், கோவில் பரம்பரை அறங்காவலர்கள், பிரம்மோற்சவ உபயதாரர்கள் மற்றும் குமளம், புதுநகர், முதலியார்குப்பம், வி.மாத்துார்பாளையம், சீனுவாசபுரம் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.