பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே, கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா வரும் 13ம் தேதி நடக்கிறது.இந்த ஆண்டு, வரும் 13ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விழா தொடங்குகிறது. மறுநாள் காலை வரை நான்கு யாம பூஜைகள் நடக்கிறது. முதல்யாமத்தில் (6:00 முதல் 9:00 மணி) வில்வமாலை, சந்தனக்காப்பு, செந்நிறபட்டு, இரண்டாவது யாமம் (9:00 முதல் 12:00 மணி) தாமரைப்பூமாலை, அகில்காப்பு, வெண்மஞ்சள் பட்டு இடம்பெறகிறது.மூன்றாவது யாமம் (இரவு 12:00 முதல் 3:00 மணி) ஜாதிப்பூமாலை, பச்சைக்கற்பூரக்காப்பு, வெண்பட்டு நான்காவது யாமம் (3:00 முதல் காலை 6:00 மணி) நந்தியாவட்டைப்பூ, ஜவ்வாது காப்பு, பச்சைப்பட்டு ஆகியவற்றில் அலங்காரங்கள் செய்யப்படுகிறது.