பதிவு செய்த நாள்
27
டிச
2011
12:12
கழுகுமலை : கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலய கோபுர அர்ச்சிப்பு விழா கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் கழுகுமலை நகரமும் ஒன்றாகும். இந்நகருக்கு சிறப்பு சேர்ப்பதில் கழுகுமலை மலைக்குன்று மற்றும் கழுகாசலமூர்த்தி கோயிலும் சிறப்பாகும். மேலும் இந்நகருக்கு சிற ப்பு சேர்ப்பதில் நூற்றாண்டு விழா கண்ட தூய லூர்தன்னை தேவாலயமும் பெ ரும் பங்கு வகிக்கிறது. கழுகுமலையில் கடந்த 105 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேறொரு இடத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாடுகள் நடத்தி வந்த நிலையில், 1906ம் ஆண்டில் தற்போதைய இடத்தில் கோயில் கட்டி வழிபாடுகள் நட த்தி வருகின்றனர். பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் கழுகுமலை பங்கானது கிறிஸ்தவ வாழ்வின் நம்பிக்கை முயற்சிகளில் பல்வேறு சிறப்பிடங்களை பெற்றுள்ளது. இக்கோயிலின் இரட்டை கோபுரங்கள் கழுகுமலை நகருக்கே பெருமை சேர்க்கும் அம்சமாகும். இக்கோபுரங்கள் காலத்தின் மாற்றத்தில் சிறிய சேதத்தை சந்திக்க நேர்ததையடுத்து, இப்பங்கு மக்கள் கோபுரங்களை புதுப்பிக்க விரும்பினர். தொடர்ந்து ஏற்பட்ட முயற்சியின் பலனாக கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலயத்தின் இரட் டை கோபுரங்கள் பாரம்பரிய முறைப்படி புதுப்பிக்க தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இரட்டை கோபுரங்களும் சீரமைக்கப்பட்டு இதற்கான அர்ச்சிப்பு விழா நடந்தது. கழுகுமலை தூய லூர்தன்னை தேவாலயத்தில் நடந்த விழாவை முன்னிட்டு கோபுர அர்ச்சிப்புக்கு வந்திருந்த பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜூக்கு பிள்ளையார் கோயில் பஸ் பஸ்டாப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பேண்ட் வாத்தியங்களுடன் புனித லூயிசா பள்ளி மாணவிகள் பூக்கள் தூவ, பங்குப்பேரவை துணை தலைவர் அந்தோணிச்சாமி மாலை மரியாதை அளித்தார். மேலும் பெருளாளர் ஜேசுராஜன் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து கோபுர புதுப்பித்தல் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பாளை மறைமாவட்ட முதன்மைகுரு ஜோமிக்ஸ் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டார அதிபர் மோயீசன் அடிகளார், கழுகுமலை பங்கு முன்னாள் பங்குத்தந்தை அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய லூர்தன்னை தேவலாய பங்குத்தந்தை லாரன்ஸ் வரவேற்றார்.
தொடர்ந்து பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் கலந்து கொண்டு இரட்டை கோபுரங்களையும், திருத்தலத்தின் மேமாத தேர் திருவிழா லூர்துமாதா சொரூபத்தையும் அர்ச்சித்தார். மேலும் ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. மேலும் பங்கு இறைமக்கள் திருவிருந்து நடந்தது. விழாவில் குருக்கள் ஞானப்பிரகாசம், திண்டுக்கல் ஜார்ஜ், சஞ்சீவி, சேகர், நெல்லை ஸ்டீபன், சேரன்மகாதேவி விக்டர், குருவிகுளம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, கோபுர வடிவமைப்பு இன்ஜினியர்கள் போஸ்கோ, நடராஜன், கோபுர திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், கழுகுமலை டவுன்பஞ்., தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் மாணிக்கம், மகேஸ்வரன் உட்பட பலர், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், பசும்பொன் தேசிய கழக பாண்டிச்சேரி மா நில தலைவர் மகாலிங்கம் குடும்பத்தினர், தங்கயானை குரூப்ஸ் மல்லிகா, ஜான்பிரபு, நிர்மலா, ரூபன்ஷா, ஜூலியானா, கிளாவர் மேட்சஸ் ரோசரி, பென்னி, ரெமிலா, பெஸி ஜோஸினா ஹெல õய்ஸ், டெஸி பெர்னாடின், செல்வமாதா குரூப்ஸ் அந்தோணிச்சாமி, ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா, பொறுப்பாளர் சேர்மராஜன், செந்தூர ராஜேஸ்வரி குடும்பத்தினர், இஞ்ஞாசி குடும்பத்தினர், சிங்கராஜா குடும்பத்தினர், நாடார் உறவின்முறை குழுவினர், நாகை மாவட்ட சிக்கல் புனித பாத்திமா டிம்பர் டிப்போ குடும்பத்தினர், ஸ்ரீ ஜெய்வைஷ்ணவி சிட்பண்ட் இசக்கி, மகேஸ் மோட்டார்ஸ் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோ வில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ, தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலலாளர் பொன்ராஜ் உட்பட பலர் வாழ்த்தினர். ஏற்பாடுகளை பங்குப்பேரவை, அருட்சகோதர சகோதரிகள், இறைமக்கள்,திருப்பணிக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.