உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பழமையான காமாட்சியம்மன் கோயில் உள்ளது. அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்தும் இக்கோயில் மகாசிவராத்திரி திருவிழாவின் போது வகுரணி, சந்தைப்பட்டி, அயோத்திபட்டி, கணவாய்பட்டி, நாவார்பட்டி, குருக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று கிராமத்து மக்கள் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வந்தனர். ஜல்லிக்கட்டுக்கு முன்பாக கிராமத்தினர் மஞ்சள் நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியபின் கோயில் முன்பாக உள்ள தொட்டியில் சேர்க்கின்றனர். மாமன், மைத்துனர் முறையுள்ளவர்கள் இந்த மஞ்சள் நீரை எடுத்து தெளித்து மஞ்சள் நீராடியபின் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காததால், தற்போது மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி மட்டும் நடக்கிறது.