பதிவு செய்த நாள்
16
பிப்
2018
01:02
குளித்தலை: மேட்டு மருதூர், அங்காள பரமேஸ்வரி கோவில் சிவாராத்திரி விழாவை முன்னிட்டு, மூன்றாம் நாள் தேரோட்டம் நடந்தது. குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்.,மேட்டு மருதூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மதியம், 12:00 மணியளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணியளவில் முக்கிய வீதி வழியாக தேர் நிலைக்கு வந்தது. கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் இருந்து, கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.