பதிவு செய்த நாள்
20
பிப்
2018
12:02
ஆத்தூர்: ஆத்தூர், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்தூர், கடைவீதி ராமலிங்க வள்ளலார் தெருவில், பழமைவாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் விநாயகர், வீரபத்திரர், பாவாடைராயர் கோவில்கள் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. கோவில்களின் கும்பாபி ?ஷக விழா, நேற்று முன்தினம், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கோபுரகலசம் வைத்தல், தீபாராதனை, தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வருதல், 108 மூலிகை பொருட்களுடன் ?ஹாமம் ஆகியன நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை நடந்தது. கும்பத்திற்கு மாலை அணிவிக்கப்பட்ட பின், 9:10 மணியளவில், வானத்தில் கருடன் வலம் வந்ததால், அதை பார்த்த பக்தர்கள் ஓம்சக்தி, ஓம்சக்தி... என்று கரகோஷம் எழுப்பினர். 9:30 மணிக்கு விமான கோபுர கலசம், பரிவார மூர்த்திகளுக்கு, வேங்கடசுப்ரமணியர், ஐயப்பன் சிவாச்சாரியார்கள், புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்து வைத்தனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.