ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் 50 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி,பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்தி சன்னதியில் முன்புறமுள்ள உண்டியல்களை ஊழியர்கள் திறந்து இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணினர். உண்டியலில் ரூ.73 லட்சத்து ஒன்பது ஆயிரத்து 948, 101 கிராம் தங்கம் 8.490 கிலோ வெள்ளி இருந்தது. எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றனர்.