பதிவு செய்த நாள்
28
பிப்
2018
12:02
பவானி: செல்லியாண்டியம்மன் கோவிலில், கருவறைக்குள் சென்று, மூலவர் சிலைக்கு, பால், புனித நீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். பவானி செல்லியாண்டியம்மன் - மாரியம்மன், எல்லையம்மன் கோவில் பொங்கல் விழா நடந்து வருகிறது. கடந்த, ??ல் கம்பம் நடப்பட்ட பிறகு, புனித நீர் ஊற்றி, மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியில் இருந்து, நேற்று நண்பகல், 12:00 மணிவரை, பால், தயிர், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், உட்பட பல வகையான திரவியங்களை கொண்டு, மூலவர் செல்லியாண்டியம்மன், மாரியமனுக்கு தாங்களே, கருவறைக்குள் சென்று பெண்கள் ஊற்றினர். ஆயிரக்கணக்கான பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இன்று காலை, எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி, நண்பகல், 12:00 மணிக்கு, பொங்கல் வைபவம் நடக்கிறது.