பதிவு செய்த நாள்
01
மார்
2018
12:03
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா, பிப்., 16ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பக்தர்கள் மலையடிக் குட்டையில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர். புனித நீரால், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, அம்மன் அழைத்தல், சக்திகரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 23ல், விளக்கு பூஜையை தொடர்ந்து அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, நான்கு ரத வீதிகள் வழியாக பகதர்கள் ஊர்வலம் வந்து, வேண்டுதல் நிறைவேற்றினர். பிப்., 25ல், 108 சங்காபிஷேகம், 26ல் பூச்சொரிதல் விழா நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது. பூசாரி பரமசிவம், கரகத்துடன் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினார். தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல், நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். வரும், 3ல், அம்மன் வீதி உலாவுடன், விழா நிறைவடைகிறது.