திறந்தவெளி கழிப்பிடமாகும் சொக்கநாதர் கோயில் தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2018 12:03
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பம் பராமரிப்பு இன்றி, திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இங்குள்ள சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ் வாய்ந்த இக்கோயிலுக்கு சொந்தமாக சூரிய புஷ்கரணி தெப்பக்குளம் உள்ளது.
அக்காலத்தில் நோய் தீர்க்கும் குளமாக இருந்த தெப்பம், தற்போது பராமரிப்பு இன்றி கழிவு நீர் தேங்கும் குட்டையாக மாறி விட்டது. தெப்பத்தை சுற்றிய வீடுகளின் கழிவு நீர், குப்பை மற்றும் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன. இதுமட்டுமன்றி தெப்பத்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி விட்டனர். இரவில் குடிமகன்கள் பாராக பயன்படுத்துகின்றனர். கோயில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்க்கிறது. தெப்பத்தை சுற்றி தடுப்பு இல்லாததால் வாகனங்களில் செல்வோர் விழும் அபாயம் உள்ளது. தெப்பத்தை பராமரிக்க கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும் என்பது, பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.