பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசிமகத்தையொட்டி வைகை ஆற்றில் தீர்த்தவாரி விழா நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் புறப்பாடாகி வைகை ஆற்றில் எழுந்தருளினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தீர்த்த தொட்டியில் சிறப்புேஹாமங்கள் நிறைவடைந்து, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து தீபாராதனைகளுக்குப் பின் பெருமாள் வீதிவலம் வந்து கோயிலை அடைந்தார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. மாலை சிறப்பு அலங்காரத்துடன் வீதிவலம் வந்தார். பரமக்குடி தரைப்பாலத்தில் உள்ள பஜனை மடத்தில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடாகி தீர்த்தவாரி நடந்தது. இதே போல் அனைத்து பெருமாள் கோயில்களிலும் மாசி மகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.