பதிவு செய்த நாள்
03
மார்
2018
12:03
திருவொற்றியூர்:திருவொற்றியூரில், நவீன தொழில்நுட்பத்தால், பெருமாள் கோவில், 6 அடி உயர்த்தப்பட்டது. சென்னை, விம்கோ, ராமநாதபுரம் பகுதியில், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், தொடர்ந்து அமைக்கப்பட்டு வரும் சாலையால், பள்ளத்தில் புதைந்தது. இதனால், கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பணியில், பக்தர்கள் ஈடுபட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, மால லிப்டில் என்ற தனியார் நிறுவன உதவியுடன், கோவிலை உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இதன்படி, ஏழு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும், 70க்கும்மேற்பட்ட, ஜாக்கிகள் கொண்டு, சிலைகள் சேதமடையாமல், 6 அடி உயரத்துக்கு, கோவில் உயர்த்தப்பட்டது. இதற்கு, 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கோவில் உயர்ந்துள்ள தால், பக்தர்கள், எளிதாக சென்று வர முடியும். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.