மைசூருக்குக் கிழக்கே 38 கி.மீ. தொலைவிலுள்ள சோமநாதபுரம் கேசவர் கோயிலில் பத்மாசனத்தில் விஷ்ணு வலக்காலையும் இடக்காலையும் மடித்து அமர்ந்து தியானக் கோலத்தில் காட்சி தருகிறார். முத்திரை காட்டும் அவரது வலக்கரத்தை இடக்கரம் தாங்கி நிற்கிறது. இவரை வழிபட்டால் வறுமை நீங்கி பெருகும் என்பது நம்பிக்கை.