கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே அம்மாபட்டி மாயக்காரி மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த இப்பூஜையின் போது, கருப்பணசாமி 16 அடியில், சயனக்கோலத்தில், ஸ்ரீமாசான கருப்பு என்ற திருநாமத்துடன் வடிவமைக்கப்பட்டு, கண்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு முன்னதாக மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இப்பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிராசதம் வழங்கப்பட்டது.