பதிவு செய்த நாள்
12
மார்
2018
01:03
பொன்னேரி : திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவிலில், 400 ஆண்டுகளுக்கு பின், பள்ளியறை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் பகுதியில் உள்ள லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவிலில், 400 ஆண்டுகளுக்கு முன், திருப்பள்ளியறை பூஜைகள் நடைபெற்று வந்தன.அதன் பின், பூஜைகள் நடைபெறாமல் இருந்தது, பக்தர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது அங்கு புதிதாக பள்ளியறை, கலைநயங்களுடன் நிர்மாணம் செய்யப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பள்ளியறை சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டு, உற்சவ பெருமானை வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கூனம்பட்டி, கல்யாணபுரி ஆதீனம் சிவஞானகுரு ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்க வாசக குரு சுவாமிகள், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பள்ளியறையை திறந்து வைத்து, கூடியிருந்த பக்தர்களிடையே சத் சங்கம் செய்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பாலைவனம், பொன்னேரி, மெதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.