தெய்வீகமான அரசமர குச்சிகளை யாகம், ஹோமத்தில் குண்டங்களில் நெருப்பு மூட்ட பயன்படுத்துவர். இதன் அடியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் இருப்பதால் மும்மூர்த்திகளின் வடிவமாக போற்றுவர். வடமொழியில் இம்மரத்தை ‘அஸ்வத்த விருட்சம்’ என்பர். ‘அஸ்வத்தம்’ என்பதற்கு ‘குதிரை’ என்பது பொருள். ஒருமுறை குதிரை வடிவெடுத்த அக்னிதேவர், இம்மரத்தில் ஒளிந்ததால் இப்பெயர் ஏற்பட்டதாக சொல்வர். திங்கட்கிழமையும் அமாவாசையும் ஒன்று சேரும் நாளில் அரசமரத்தை சுற்றி வந்து வழிபட புத்திரதோஷம் நீங்கும்.