மன்னர் பிட்டிதேவராயரை சமண மதத்தில் இருந்து வைணவத்திற்கு மாற்றியவர் ராமானுஜர். விஷ்ணு மீது கொண்ட பக்தியால் தன் பெயரை ‘விஷ்ணுவர்த்தன்’ என மாற்றிக் கொண்டார் மன்னர். இவரால் கட்டிய பேளூர் சென்ன கேசவர் கோயிலில், மனைவி சாந்தளாதேவியின் விருப்பத்திற்காக, இசை, நடனக் கலையை வெளிப் படுத்தும் சிற்பங்களை செதுக்கினார். நடன மங்கையர் தலை பின்னுவது, கண்ணாடி முன் ஒப்பனை செய்வது, வாத்தியம் இசைக்க நடனமாடுவது, கைகளால் அபிநயம் செய்வது என காண்போரை கவரும் விதத்தில் அவை உள்ளன. இதில் கருவறையின் முன்புள்ள நவரங்க மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் உள்ள ‘தர்பன சுந்தரி’ என்னும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் சிற்பம் புகழ் மிக்கது.