Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபெரும்புதூர் கோவில் தேருக்கு ... திருவாடானையில் சமயபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் தங்க தேரோட்டம் எப்போது: 3 ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
திருத்தணியில் தங்க தேரோட்டம் எப்போது: 3 ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

24 மார்
2018
03:03

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் உள்ள வெள்ளி மற்றும் தங்கத் தேர்கள் பழுதடைந்து உள்ளதால், மூன்று ஆண்டுகளாக, வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல், பக்தர்கள் பரிதவிக்கின்றனர். தேர்களை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என,

அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சில பக்தர்கள், உற்சவர் முருகப் பெருமானை தங்கத் தேர், வெள்ளித் தேர், வெள்ளி மயில் வாகனம் போன்ற வாகனங்களில், அதற்கான கட்டணம் செலுத்தி, மாட வீதியில் வீதியுலா வரச் செய்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

வெள்ளோட்டம் நிறுத்தம் : மலைக் கோவிலில் உள்ள வெள்ளித் தேர், மூன்று ஆண்டுகளுக்கு முன், பழுதடைந்து அந்த சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், இரு ஆண்டுகளுக்கு முன், தங்கத் தேரும் பழுதடைந்து வெள்ளோட்டம் நிறுத்தப்பட்டது.பக்தர்கள், வெள்ளிமற்றும் தங்கத் தேருக்கு பதிலாக, வெள்ளி மயில் வாகனத்திற்கு பணம் கட்டி, தங்கள் வேண்டுதலை

நிறைவேற்றுகின்றனர்.பெரும்பாலான பக்தர்கள், வெள்ளி மற்றும் தங்கத் தேர் வெள்ளோட்டம் இல்லாததால்,தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இது தவிர, திருத்தணி முருகன் திருவடி சபை மற்றும் பக்தர்கள் சார்பில், தேர்களை சீரமை க்க, கோவில் நிர்வாகத்திடம் பல முறை புகார் மற்றும் கோரிக்கை மனு கொடுக்க ப்பட்டது. ஆனால், இதுவரை சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. திருத்தணி முருகன் கோவிலில் நடக்கும் சேவைகள் குறித்தும்,அதற்கான கட்டணம் குறித்தும், கோவில் நிர்வா கம், தல வரலாறு

புத்தகத்திலும், ஆன் லைன் மூலமும்வெளியிட்டுள்ளது.அதில், வெள்ளித் தேர், 3,500 ரூபாய், தங்கத் தேர், 2,000 ரூபாய், வெள்ளி மயில் வாகனம், 3,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.ஆனால், வெள்ளித் தேர் மற்றும் தங்கத் தேர் பழுதடைந்து, பல ஆண்டுகளா கியும், தொடர்ந்து வெள்ளி, தங்கத் தேர் சேவை இருப்பதாகவும், கட்டணமும் வெளியிடு கிறது. வெள்ளி, தங்கத் தேர் சேவைக்கு, ஆன் லைன் மூலம் பக்தர்கள், முன்பதிவு செய்கின் றனர்.

ஆனால், பிரார்த்தனை நிறைவேற்ற வரும் போது, மலைக் கோவிலில் ஊழியர்கள், வெள்ளி, தங்கத் தேர் பழுது, வெள்ளி மயில் வாகனம் தான் உள்ளது எனக் கூறி, உற்சவ பெருமானை, வெள்ளி மயில்வாகனத்தில் வீதியுலாவை நடத்தி தருகின்றனர்.இதனால், ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அதிருப்திஅடைகின்றனர்.


கோயில் அதிகாரிஒருவர் கூறியதாவது:முருகன் மலைக் கோயிலில், பழுதடைந்த வெள்ளித் தேரை மட்டும் கமிஷனரின் உத்தரவு பெற்று, பழுது பார்க்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

தற்போது, வெள்ளித் தேருக்கு, மரச் சாமான்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகி ன்றன. இரு மாதங்களில், வெள்ளித் தேர், மீண்டும்மலைக் கோவிலில் வெள்ளோட்டம் வரும்.தங்கத் தேர் பழுது பார்ப்பதற்கு, இந்து அறநிலையத் துறை கமிஷனரின் அனுமதிக்காக, பரிந்துரை கடிதம் அனுப்பி, உத்தரவுக்காக காத்திருக்கிறோம். கமிஷனரின் உத்தரவு கிடைக்காததால்,

தங்கத் தேர் பழுது பார்ப்பதில், தாமதம் ஆகிறது.இவ்வாறு அவர்கூறினார்.

பிரம்மோற்ஸவத்திற்கு வருமா?: திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி மாதம் மற்றும் சித்திரை மாதம் பிரம்மோற்ஸவம், வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அப்போது, தங்கத் தேர் மற்றும் வெள்ளித் தேரில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.தங்கம் மற்றும் வெள்ளி தேர் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும், இதுவ ரை சீரமைக்கப்படவில்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள, சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவிற்காவது, வெள்ளி தேர் சீரமைத்து பயன்பாட்டிற்கு வருமா என, பக்தர் எதிர்பார்க்கி ன்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar