திருப்பதி வெங்கடேசப் பெருமாளை நினைத்து சனிக்கிழமை விரதமிருக்க, பக்தர்கள் திருப்பதி வருகின்றனர். ஆனால் அவர்கள் கருவறையில் பெருமாளின் முன்னிலையில் நிற்பதோ, கண் மூடித் திறக்கும் கணப்பொழுது தான். இதனால் பக்தர்கள், கருவறை மேலுள்ள ஆனந்த விமானத்திலுள்ள விமான வெங்கடேசரை நிதானமாக தரிசித்து மனநிறைவு அடைகின்றனர். இந்த விமானம் மூன்றடுக்கு உள்ளது. பொன்மயமாக விளங்கும் மேருமலையின் ஒரு பாகமே, ஆனந்த விமானமாக மாறி வெங்கடேசப் பெருமாளுடன் திருமலைக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டில், வீரநரசிங்கதேவன் என்ற மன்னன் ஆனந்த நிலையத்திற்கு தங்கம் வேய்ந்தான்.