தெய்வீகம், யோகம், மருத்துவ குணம் கொண்டது குங்குமம். சுமங்கலியின் வகிட்டு குங்குமத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். சுமங்கலிகளிடம் கொடுத்தாலும், வாங்கினாலும் மாங்கல்ய பலம் பெருகும். பெண்கள் தன் நெற்றியில் இட்ட பிறகே மற்றவருக்கு கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிக்கும். நெற்றியில் வைத்தால் உடல்சூடு தணியும். புருவங்களை இணைப்பது போல வைக்க தன்னம்பிக்கை கூடும். கட்டை விரலால் வைக்க துணிச்சல் பிறக்கும். ஆள்காட்டி விரலால் வைக்க நிர்வாகத்திறன் அதிகரிக்கும். நடுவிரலால் வைக்க தீர்க்காயுளுடன் வாழும் பேறு கிடைக்கும். புருவத்திற்கு நடுவில் வைத்தால் மன அமைதி பிறக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எதையும் முறியடிக்கும் சக்தி உண்டு. கிருமி நாசினியான மஞ்சள் இருப்பதால் நோய் வராமல் தடுக்கும்.