Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக்தி அளிக்கும் முக்தேஸ்வரர் நிமிடத்தில் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் நிமிடத்தில் வாழ்க்கையை மாற்றும் ...
முதல் பக்கம் » துளிகள்
குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் புராதன உமா மஹேஸ்வரி கோவில்
எழுத்தின் அளவு:
குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் புராதன உமா மஹேஸ்வரி கோவில்

பதிவு செய்த நாள்

20 ஜன
2026
10:01

கர்நாடகாவின் பீதர் மாவட்டம், வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம். ஆனால், இங்குள்ள கோட்டைகள், புராதன கோவில்கள், சுற்றுலா தலங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன. பீதரில் உள்ள கோவில்களில், உமா மஹேஸ்வரி கோவில் மிகவும் பிரபலமானது மற்றும் புராதனமானது.


மாவட்டத்தின் பசவ கல்யாணா தாலுகாவில் உள்ள இக்கோவில், சாளுக்ய மன்னரான ஆறாவது விக்ரமாதித்யா கட்டியதாகும். அற்புதமான கட்டட கலைக்கு பெயர் பெற்றது. கோவிலின் கோபுரத்தை பார்த்தாலே போதும். மன்னராட்சி காலத்தில் இருந்த கட்டடக்கலை வல்லுநர்களின் அற்புதமான கலைத்திறனை தெரிந்து கொள்ளலாம். இக்கோவிலை சுற்றிலும் நீலகண்டர் கோவில், மஹாதேவா, பார்வதி, விநாயகர் கோவில்கள் உள்ளன.


அனைத்து கோவில்களை சுற்றிலும், கலை நுணுக்கங்கள் உடைய சிற்பங்கள் உள்ளன. ஒரு முறை சிற்பங்களை பார்த்தால், கண்களை எடுக்கவே முடியாது. பார்த்து கொண்டே இருக்கலாம் என்றே தோன்றும். மஹாதேவா கோவிலின் பின் பகுதியில், பார்வதி கோவில் உள்ளது. உகாதி பண்டிகை நாளில் சூரிய கதிர்கள், கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுவதை காணலாம். இது உமா மஹேஸ்வரி கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.


கோவில் கர்நாடக தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர். செவ்வாய், வெள்ளிகிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். குடும்பத்தில் பிரச்னைகள் இருந்தால், திருமணம் தடைபட்டால், தம்பதிக்கு இடையே ஒற்றுமை இல்லாவிட்டால், உமா மஹேஸ்வரியை தரிசனம் செய்தால் போதும். அனைத்து கஷ்டங்களும் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.


எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து, 600 கி.மீ., கலபுரகியில் இருந்து 80 கி.மீ., பெலகாவியில் இருந்து, 429 கி.மீ., பீதரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் பசவ கல்யாணா நகரம் உள்ளது. அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து, பசவ கல்யாணாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. பஸ் அல்லது ரயிலில் செல்வோர், பசவகல்யாணாவில் இறங்கி, வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம். விமானத்தில் வருவோர் கலபுரகி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கோவிலுக்கு செல்ல வாடகை வாகனங்கள் உள்ளன. 

 
மேலும் துளிகள் »
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 
temple news
ஹாவேரி மாவட்டம், பல அரச வம்சத்தினரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த மாவட்டம். கதம்பர் முதல் மைசூரு அரச ... மேலும்
 
temple news
தெய்வீகம், யோகம், மருத்துவ குணம் கொண்டது குங்குமம். சுமங்கலியின் வகிட்டு குங்குமத்தில் மகாலட்சுமி ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar