பதிவு செய்த நாள்
27
மார்
2018
03:03
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, பல்லக்கில் பவனி வந்து, கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாத பெருவிழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பத்து நாட்களுக்கு நடக்கும், இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா, மார்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. பல்லக்கில் பவனி வந்து, கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேர் திருவிழா, மார்ச், 28ல் நடக்கிறது. அன்று அதிகாலை, 4:30 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை, 6:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று, ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.
மார்ச், 29ல், காலை, திருஞான சம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை, வெள்ளி விமானத்தில் இறைவன், அறுப்பத்து மூன்று நாயன்மார்களுடன் திரு காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு, சந்திரசேகரர் பார்வேட்டை நடக்கிறது.விழாவின் இறுதி நாளான, மார்ச், 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு நடக்கிறது.அன்று மாலை, 6:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.