ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு செப்புத்தேரோட்டம் நேற்று(மார்ச் 30)ல் நடந்தது. அதிகாலை செப்புத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். காலை 7:05 மணிக்கு செப்புத்தேரினை திரளான ஆண், பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளை சுற்றி ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் வந்தது. தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.