சேத்துார்: சேத்துார் எக்கலா தேவிஅம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்துவங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு ,அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள்நடைபெற்றது. 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மதியம் 2:00மணிக்கு கோயில் பூஜாரி அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வந்தார். இரவு 9:00 மணிக்குகலை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியாக ஏப். 8ல் அம்மன்தண்டியல் சப்பரத்தில் வீதி உலா, 9ல் மாலையில் பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை மும்மூர்த்தி தேவர், கோயில் அறங்காவலர்சுப்பிரமணியன் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.