Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பணப்புழக்கம் அதிகரிக்கும் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் உதவி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:18

பிறருக்கு உதவி செய்து மகிழும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் மே 1 வரை செவ்வாயும், மே 4 வரை புதனும் சாதகமான இடத்தில் இருக்கின்றனர். சுக்கிரன் ஏப்.21 முதல் சாதகமான இடத்திற்கு வருகிறார். ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் சனி தொடர்ந்து நற்பலன்  கொடுப்பார். சனிபகவானின் பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப் போது  பிரச்னை வந்தாலும் பாதிப்பு இருக்காது. சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். சுபநிகழ்ச்சிகள் திட்டமிட் டபடி நடந்தேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். ஏப்.21க்கு பிறகு ஆடம்பர வசதி பெருகும்.  

நண்பர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  ஏப்ரல் 29,30ல் அவர்களால் ஆதாயபலன் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.25,26ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக் கும். அதே நேரம் மே 6,7,8ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். எனவே அவர்கள் வகையில் சற்று விலகி இருக்கவும்.  மே 3க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். பொறுமையுடன் விட்டுக்கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை  ஏப்.21க்கு பிறகு அடியோடு மறையும். அதன் பின் உங்களுக்கு தொல்லை கொடுத்த பெண்களே தவறை உணர்ந்து உதவ முன்வருவர்.  பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும்.

ஏப். 27,28 மே 1,2,3 ல் சந்திரனால்  தடைகள் ஏற்படலாம். ஏப்.14,15 மே 11,12,13ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.  பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மே 3க்குள் கேட்டு பெற்று கொள்ள வும். அதன் பிறகு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காணலாம். ஏப்.23,24 ஆகியவை  சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்கள் வகையில் இருந்த பிரச்னை ஏப்.21க்கு பிறகு மறையும். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மே 9,10ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மே 3க்கு பிறகு படிப்பில்  மெத்தனமாக இருக்க வேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். கரும்பு, எள், கொள்ளு, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து மே 1க்குள் வாங்கலாம். அதன் பிறகு வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்கள்  மகிழ்ச்சிகரமாக வாழ்வு நடத்துவர். உங்களால் குடும்பம்
சிறப்படையும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். மே 3க்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஏப்.16,17, மே14 ஆகியவை சிறப்பான  நாட்களாக அமையும். சகோதரிகள் வகையில் உதவி கிடைக்கும். மே4,5 ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். உடல் நலம் பாதிக்கலாம்; சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: ஏப்.14,15,16,17,23,24,25,26,29, 30 மே 4,5,11,12,13,14
* கவன நாள்: ஏப். 18,19,20சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,7 நிறம்: நீலம், பச்சை.

* பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* பவுர்ணமியன்று அம்மனுக்கு விளக்கு  
* ஏகாதசியன்று பெருமாள் வழிபாடு.

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.