சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2018 12:04
ஆண்டிபட்டி, சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் 93 ம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது. கணபதி ேஹாமத்துக்குப்பின் பல்லக்கில் கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின் கொடியேற்றப்பட்டது.ஏப்.23 வரை தினமும் அம்மன் கோயில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 24 ல் அம்மன் சிம்ம வாகனம், 25 ல் அன்னவாகனம், 26 ல் முத்துப்பல்லக்கு, 27 ல் பூப்பல்லக்கிலும் அம்மன் சக்கம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலாவந்து அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.