மகரவிளக்கு நாளில் சபரிமலை நடை திறக்கும் நேரம் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2012 10:01
சபரிமலை: சபரிமலையில் மகர சங்கரம பூஜை, ஜன., 15 ல் அதிகாலை நடைபெறுவதால், அன்றைய தினம் காலையில் நடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஜன.,15 ல், அதிகாலை 12.59 மணிக்கு சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் மாறுகிறது. இந்த நேரத்தில் மகர சங்கரம பூஜை நடைபெறுகிறது. இதனால் ஜன.,14 மாலை மூன்று மணிக்கு திறக்கும் நடை, இரவு 11.45 க்கு மூடப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மகர சங்கரமபூஜை முடிந்து 1.30 மணிக்கு அடைக்கப்படும்.ஜன.,15 ல் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறப்பதற்கு பதிலாக நான்கு மணிக்கு திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருவாபரணம் அணிவித்து தீபாரானையும், அதை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரியும் நிகழ்ச்சியும் நடைபெறும்.