திருப்புத்துார்: திருப்புத்துார் குளம்கரை கூத்த அய்யனார் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பக்தர்கள் காவடி,பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அய்யனாருக்கு பாலாபிேஷகம் நடந்தது.சர்வ அலங்காரத்தில் பூரண புஷ்கலா சமேதராக அய்யனார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிராவயல் தேனாட்சிஅம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேலப்பிள்ளையார் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர். திருக்கோளக்குடியில் கிராம தெய்வங்களை வழிபட்டு கிரிவலம்துவங்கினர். திருக்கோளநாதருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மாலையில் சிவகாமி அம்மனுக்கும்,சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.