ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் 20 அடி நீள சூலத்தை அலகாக குத்தி வந்தனர். நெச்சிவயல் ஊரணியில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா முக்கிய வீதிகளில் நடந்தது.