பதிவு செய்த நாள்
02
மே
2018
11:05
திருநெல்வேலி: நெல்லையில் 126 ஆண்டுகளுக்கு பிறகு தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி , தச்சநல்லூரில் அமைந்துள்ளது வரம் தரும் பெருமாள் திருக்கோயில் இக்கோவில் கல்வெட்டில் கி.பி 1232 ம் ஆண்டு இப்பகுதி தச்சனுார் என்று அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அக்காலத்தில் தாமிரபரணி ஆற்றை எல்லைகளாக கொண்டிருந்த இரு நாடுகளில் கீழ நாட்டு வேம்பு பிரிவில் தச்சனுார் இருந்துள்ளது. இதன் படி இக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் முந்தையதாகும்.கி.பி 1734 ம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மர் எனும் அரசராலும் பினனர் வல்லப மங்களத்து அரசராலும் பராமரிக்கப்பட்டுள்ளது,
மேலும் குலசேகர பாண்டிய மன்னர் இக்கோவிலை சிறப்பாக பராமரிக்கும் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார். 16 ம் நுாற்றாணடில் சுந்தரபாண்டிய மன்னர் மதுரை திருமலை நாயக்க மன்னராலும் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது.மதுரையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு இங்கு வந்து மதுரை மன்னர்கள் வழிபட்டது குறித்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகா மண்டபத்தில் மேல் காணும் கல்வெட்டில் சங்கரநாராயண முதலியார் தர்மகர்த்தாவாக செயல்பட்ட கி்பி. 1891 ம் ஆண்டு சித்திரை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றதாக தெரிகிறது. கி்பி 1891 ம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 126 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடக்கிறது இக்கோயிலில் வரம் தரும் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன.
இப்புகழ்பெற்ற திருக் கோவிலில் 112 ஆண்டுகளுக்கு பிறகுகடந்த 06 -07 2017 ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு இன்று காலை 6.47 மணிக்கு மேல் 7.27 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை (01-05-18) அன்று புண்ணியாதனம், அக்னி ஆராதனம்,நியாசங்கள் பிம்ப கத்தி ஹோமம்,உக்த ஹோமம், பூர்ணாகுதி, விஷேச தீப ஆராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான இன்று காலை 5 மணி முதல் புண்ணியாகம் ,உபரிஷ்டா தந்திரம்,அக்னி சாப ரோபணம்,யாத்ரா தானம் ,ஆலய பிரதஹீனாம் முகூர்த்தத்தில் மூலவர் ,விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஸம்ப்ரோக்ஸனம் தீபாராதனை ,வேத ப்ரபந்த சாத்துமுறை கோஷ்டி,மங்கள ஆசீர்வாதம்,எஜமானர்கள் ஆச்சார்யர்கள் மரியாதைகள் நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ ராம பக்த சபையினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.