Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கெட்ட கனவு வராமல் இருக்க.. கெட்ட கனவு வராமல் இருக்க.. குடும்பம் செழிக்க குமுதவல்லியை வணங்கலாம்! குடும்பம் செழிக்க குமுதவல்லியை ...
முதல் பக்கம் » துளிகள்
அக்னி நட்சத்திரம் மே 4ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2018
16:47

இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிகிறது.

அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று வியர்த்து வழிவதில் ஆரம்பித்து அப்பாடா என்று  களைத்து அமர்வதில் இது முடியும். இப்படி அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்களுக்கும், புராணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ?  அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால்தான் இந்த நிலை என்கிறது விஞ்ஞானம். கார்த்திகை  நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். இது நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

அக்னி நட்சத்திரம் எப்படி பிறந்துச்சு: முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து  உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரின ங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை  அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம்  அக்னிக்கு உதவச் சொன்னார்.  அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந் தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள்  மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம்  என புராணக்கதை கூறுகிறது.

ஆறுதல் பெற ஆண்டவனை கும்பிடுங்க: அக்னி நட்சத்திர காலத்தில் அதிகாலை துயிலெழுந்து நீராடியபின் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும்  செய்வது சிறந்தது. முருகனையும், மீனாட்சியையும் வழிபடுவதுடன், பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு  உரிய அக்னியையும் வழிபாடு செய்வதும் நல்லது.

தாகம் தீர்க்க தானம் பண்ணுங்க: குடை, விசிறி, காலணிகள் தானம் செய்யலாம். அத்துடன் அன்னதானமும் ஆடைதானமும் செய்வது நல்லது.  தண்ணீர்ப் பந்தல் அமைத்து தண்ணீர், நீர்மோர் போன்றவத்தைத் தருவது நற்பலன் தரும். அக்னி நட்சத்திர நாட்களில் நோய்கள் பல பரவக்கூடிய  வாய்ப்பு உள்ளது. அக்னிக் காற்று நோய் பரப்பும் தன்மை கொண்டது. அதனால் தினமும் குடத்தில் நீர் நிரப்பி மஞ்சள் கரைத்த அதனை வேப்பிலைக்  கொத்துகளால் நனைத்து வீடு முழுதும் தெளிக்கலாம். நரசிம்மரை வழிபட்டு தயிர்சாதம், நீர்மோர், பானகம் படைத்து தானம் செய்யலாம். விஷ்ணு  நாமத்தை 108 முறை ஜபிக்கலாம். சீதளா தேவி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.

எளிய எல்லோராலும் இயன்ற வழி, இக்காலத்தில் அகமும் புறமும் தூய்மையுடன் இருப்பதும், பிறர் மனம் குளிரும்  வண்ணம் நடப்பதும், இயன்ற அளவில் தருமம் செய்வதும், மனம் உருகி இறைவனை வழிபடுவதும், கடவுள் அருள் மழையில் நம்மை நனைக்கும்  என்பது நிச்சயம். இறைவன் கருணை மழையில் நனைந்து விட்டால் கத்திரி வெயிலும் நம்மை வாட்டாது குளிரும் வாழ்வும் மலரும்.

இந்த அக்னி நட்சத்திர நாட்கள் குறித்து புராணங்களில் தகவல்கள் உண்டு.

யமுனை நதிக்கரைக்கு அருகில் காண்டவ வனம் என்ற பெரிய வனம் இருந்தது. அது இந்திரனால் காக்கப்பட்டது. அந்த வனத்தில் உயிர்காக்கும் அரிய முலிகைகளை செழித்து வளரச் செய்தான். மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவ வனன்’ என்ற பெயரும் உண்டு.)

ஒருசமயம் வனத்தின் அருகே ஓடும் யமுனையில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தார்கள். அவர்கள் கரையேறும் போது அந்தணர் ஒருவர் அங்கே வந்தார். அவர் கண்ணனிடம், “எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. அதற்கு நீங்கள்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணி தீர்க்கும் மருந்துள்ளது. நான் இந்த வனத்தில் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார். அவரது வேண்டுதல் வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அவரை உற்றுப்பார்த்தார்.

“அக்னிதேவனே, ஏன் இந்த வேடம்?” என்று கண்ணன் கேட்க, தன் வேடத்தைக் கலைத்த அக்னிதேவன், “பரமாத்மாவே, தங்களுக்குத் தெரியாததல்ல. துர்வாச முனிவர், சுவேதசி என்னும் மன்னனுக்காக நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட அதிகப்படியான நெய்யை நான் உண்ணும்படி நேர்ந்ததால் மந்தநோய் என்னைத் தாக்கிவிட்டது. அதிலிருந்து நான் குணமடைய தகுந்த மூலிகைகள் இந்த வனத்தில் உள்ளன. இதற்குள் நான் பிரவேசிக்கும் பொழுதெல்லாம், இந்திரன் மழைபொழிய மேங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான். அதனால் என் நோய் தீர மூலிகைகள் கிடைக்காமல் மிகவும் துன்பப்படுகிறேன். எனக்கு உதவுங்கள்” என்றான்.

“உனக்கு இதனைச் செய்வதால் எங்களுக்கு என்ன பயன்?” என்று அர்ச்சுனன் கேட்டான்.

“நீங்கள் கேட்டதைத் தருகிறேன்” என்று அக்னிதேவன் வாக்கு கொடுத்தான்.

உடனே கண்ணன், “நாங்கள் இங்கு நீராடத் தான் வந்தோம். எனவே எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. தற்பொழுது காண்டீபம், அம்பறாத்தூணி, அம்புகள், தேர் ஆகியவை வேண்டும்” என்றார்.

உடனே அக்னிதேவன் அவற்றை ஒரே நொடியில் வரவழைத்துக் கொடுத்தான். கண்ணன், அர்ச்சுனனைப் பார்க்க, அவற்றைப் பெற்றுக்கொண்டான் அர்ச்சுனன்.

அப்பொழுது கண்ணன், “அக்னி தேவனே, ஒரு நிபந்தனை உன் பிணியைத் தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த வனத்திற்குள் பிரவேசிக்கலாம். அதிகமாக அரிய மூலிகைகளை நீ உண்டால் அதுவே உனக்கு நஞ்சாக மாறிவிடும். நீ காட்டிற்குள் நுழையும் சமயத்தில் இந்திரன் மழை பொழிவிக்காமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.

அக்னியும் அதற்கு உடன்பட்டு காண்டவ வனத்திற்குள் பிரவேசித்தான். இதனையறிந்த இந்திரன், காளமேகத்தை அழைத்து காண்டவ வனப்பகுதியில் மழைபொழிய உத்தரவிட்டான். காளமேகம், தன் நண்பர்கள் கூட்டத்துடன் காண்டவ வனத்தை நோக்கி வருவதைப் பார்த்த கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அதன் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், தன் அம்புகளால் சரக்கூடு கட்டி மழை பொழிவதைத் தடுத்தான்.

அக்னியும் ஏழு நாட்கள் வேகமாக வனத்திலுள்ள மூலிகைகள் பகுதிக்குச் சென்று கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருந்த மருத்துவ சக்திமிக்க மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் பகவானிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

அறிவியல் ரீதியாக நாம் வாழும் பூமி 235 பாகை சாய்வான நிலையில், சீரான அச்சில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும்பொழுது பூமியின் வடபுலத்தில் ஆறு மாதங்களும், தென்புலத்தில் ஆறு மாதங்களும் சூரியனின் ஒளி விழும். சூரிய ஒளி நேராக விழும்  காலம் கோடை சாய்வாக விழும் காலம் குளிர்காலம் கோடை காலத்தில் சில நாட்கள் மட்டும் சூரியனின் கதிர்கள் நேர்கோணத்தில் பூமிமீது விழும். அப்போது சூரியனின் அதிகபட்ச வெப்பம் பூமிமீது விழும் இதைத்தான் கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம் என்கிறோம்.

 
மேலும் துளிகள் »
temple
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் ... மேலும்
 
temple
மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ... மேலும்
 
temple
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் ... மேலும்
 
temple
சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள ஆதிமூலநாதர், உமைய பார்வதி அம்மனை வழிபட்டால் உடனடியாக திருமணம் ... மேலும்
 
temple
ஏழு அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் எருக்க இலைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை இல்லாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.