பதிவு செய்த நாள்
11
ஜன
2012
12:01
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, திருமுறை மண்டபத்தில் வீற்றிருக்கும், ஸ்ரீ திருநீலகண்டநாயனாரின் 100வது ஆண்டு குருபூஜை விழா, வரும் 18ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 7.00 மணிக்கு, சாந்தலிங்கர் திருமடத்தில் இருந்து, 100 பால்குடங்களுடன் திருக்கோவிலுக்கு புறப்பாடு நடக்கிறது. 10.00 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி, நடராஜர், சிவகாமிஅம் பாள், திருநீலகண்டர் உடனமர் ரத்தினசாலை அம்மை உட்பட 63 நாயன்மார்கள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை மற்றும் பேரொளி வழிபாடுகள் நடக்கின்றன. பகல் 12.00 மணிக்கு, தெய்வத்திருமேனிகள் திருவீதி உலா, 1.00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, மாலை ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மறுநாள், 14ம் தேதி காலை 10 மணிக்கு, திருநீலகண்ட நாயனாரின் 100வது ஆண்டு குருபூஜை விழாவும், மலர் வெளியீட்டு விழாவும் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் குருபூஜை கழகம் செய்து வருகிறது.