ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை புது மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, ஏப்., 24ல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மாலை, பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சி, இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று, கம்பம் காவிரி ஆற்றுக்கு செல்லுதல், நாளை மாலை மஞ்சள் நீராடல் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.