பதிவு செய்த நாள்
03
மே
2018
01:05
மோகனூர்: ஓலைப்பிடாரி காளியம்மன் கோவில் தூக்குத்தேர் திருவிழா, கோலாகலமாக நடந்தது. மோகனூர் அடுத்த கிடாரத்தில், ஓலைப் பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும், தூக்குத்தேர் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 25ல் துவங்கியது. நேற்று காலை, ஓலையில் பின்னப்பட்ட சுவாமி, தூக்குத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள், 29 அடி உயர தூக்குத்தேரை தூக்கிக் கொண்டு, மேலூர், குண்டாங்கல்பாளையம், அய்யம்பாளையம், சூரம்பட்டி ஆகிய கிராமங்களை வலம் வந்தனர். இரவு, 8:00 மணிக்கு, தூக்குத்தேர் கோவிலை நிலை அடைந்தது. தொடர்ந்து, எல்லை உடைக்கப்பட்டது. இன்று, கிடா வெட்டுதல், நாளை மறு தூக்குத்தேர் எடுத்துச் செல்லப்படுகிறது. அப்போது, மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்படும். வரும், 5ல் கோவிலை தேர் அடைகிறது.