Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடும்பம் செழிக்க குமுதவல்லியை ... ஸ்ரீரங்கம் கோயில் ஐந்து குழி மூன்று வாசல் பற்றி தெரியுமா ஸ்ரீரங்கம் கோயில் ஐந்து குழி மூன்று ...
முதல் பக்கம் » துளிகள்
கலியுகம் ஆரம்பமானது எப்போது தெரியுமா?
எழுத்தின் அளவு:
கலியுகம் ஆரம்பமானது எப்போது தெரியுமா?

பதிவு செய்த நாள்

07 மே
2018
05:05

ஒரு மாசி அமாவாசை அன்றுதான் துவாபரயுகம் முடிவு பெற்று, அதற்கு அடுத்த நாள் கலியுகம் ஆரம்பமானது என்று புராணங்கள் கூறுகின்றன. துவாபரயுகத்தில் அவதரித்த பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு உற்ற தோழனாகத் திகழ்ந்தார். பாரதப் போரினை குருக்ஷேத்திரத்தில் நடத்தினார். போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்தவர். உபதேசமும் செய்தார். துரியோதனன் கூட்டத்தினர்களை அழிக்க வழிவகுத்துக் கொடுத்தார். பாண்டவர்களுக்கு, அவர்கள் இழந்த நாட்டினை மீட்டுக் கொடுத்தார். மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற பகவான் கிருஷ்ணர், ஒரு நாள் த்வாரகைக்கு அருகில் உள்ள வனத்தில் ஓர் அரச மரத்தடியில் ஆழ்ந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அந்த நாள் தான் - துவாபரயுகத்தின் இறுதிநாள் என்கிறது புராணம். ‘பகவான் கிருஷ்ணர்’ துவரகா அருகில் உள்ள சோம்நாத் தலத்தில் தன் இறுதிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்கிறது புராணம் அங்குள்ள “வெகுராவெல் ” என்ற கிராமத்திற்கு அருகில் “ஹபாலிகா ” தீர்த்தம் என்னும் நதி உள்ளது. அந்த நதிக்கரையில் புதர்கள் நிறைந்த அரச மரத்தடியில் பகவான் கிருஷ்ணர். யோகத்தில் ஆழ்ந்திருந்தபோது முயல்வேட்டைக்கு வந்த ‘ஜரா’ என்ற வேடன் (முற் பிறவியில் இவன் வானர வேந்தன் வாலியாக இருந்தவன்) முயல் ஒன்று அரசமரம் பக்கம் ஓடியதைக் கண்டு முயல் மீது அம்பு எய்தான். அந்த அம்பு தவறுதலாக பகவான் பாதத்தில் பாய்ந்தது. அதுவே, பகவானின் இறுதிக்குக் காரணமாகத் திகழ்ந்தது.

‘ஜரா’ என்ற வேடன். பகவான் கிருஷ்ணன் மீது தவறுதலாக அம்பு எய்ததற்குக் காரணம் என்ன? புராணம் கூறும் தகவல்: மகாவிஷ்ணு, ராம அவதாரத்தின் போது தசரத குமாரனாக அவதரித்தார். வனவாசத்தில் சீதையைத் தேடிச் சென்ற ராமன் சுக்ரீவனுக்கு, உதவ வாலியை வதம் செய்ய முடிவு செய்கிறார். வாலியும் சுக்ரீவனும் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கும் போது, ராமர், ஒரு மரத்தின் மறைவில் நின்று கொண்டு வாலி மீது அம்பு எய்தி வீழ்த்தினார். மார்பில் பாய்ந்திருந்த, அம்பினைப் பார்த்தான். அந்த அம்பில் “ராமா ’ என்ற பெயர் பொறித்திருந்தது. ராமா... ராமா.... ராமா... ” என்று மூன்று முறை அழைத்தான் வாலி. அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் வாலியிடம் சென் றார் ராமர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வாலி, “ராமா, நீ யார் என்பதை நான் அறிவேன். உனக்கும் எனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒருத்தியைக் கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய்... என்னிடம் நேருக்கு நேர் போர் புரிந்து வெல்ல முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலை உனக்கும் என்னால் ஏற்படும்” என்று வேதனையுடன் கூறினான் வாலி.

இந்தச் சம்பவம் நடந்தது திரேதாயுகத்தில். அந்தச் சம்பவம் தான் இப்பொழுது நடந்தது (பலித்தது). இது துவாபரயுகம். வேடன், தவறுதலாக எய்த அம்பின் விளைவால், பகவான் கிருஷ்ணர், முக்தியடைந்ததாகவும், காப்பாற்றவந்த பலராமருக்கு இயலாது போகவே, அங்கேயே பகவான் முக்தியடைந்தாகவும்... சோம்நாத் கோயிலில் உள்ள கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன. மேலும், பகவான், ‘பிரபாசம் ’ என்ற க்ஷேத்திரத்தில் இரண்டு நதிகள் சங்கமமாகும் அரசமரத்தடியில் உயிர் நீத்தார். சாரீரத்தை தகனம் செய்யும் போது, நதிகளில் திடீர் என்று பிரவாகம் வந்து கிருஷ்ணரின் திருமேனியை இழுத்துக் கொண்டு போய் விட்டது என்றும் புராணம் கூறுகிறது. ‘பிரபாசபட்டினம் ’ தற்போது யாத்திரைத் தலமாக உள்ளது. அங்குள்ள அரசமரத்திற்கு அருகில் ஒரு கிருஷ்ணர் கோயில் உள்ளது. பலராமர், ஆதிசேஷனாக உருவெடுத்து அங்குள்ள குகைக்குள் மறைந்து விட்டார். என்றும் புராணம் கூறுகிறது. பகவான், வைகுண்டம் சென்ற நாள் துவாபரயுகம் முடிந்த நாள் என்று கூறும் புராணம் அன்று மாசி அமாவாசை என்கிறது. அதன் பின் கலியுகம் ஆரம்பமானது என்கிறது புராணம். தற்பொழுது கலியுகம் 5118 -ம் ஆண்டு நடக்கிறது. இந்தத் தகவல்களையும் சோமநாத் கோயிலில் உள்ள குறிப்பு சொல்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar