விநாயகரை ஆற்றங்கரை, படித்துறை, அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2018 03:05
மூலாதார மூர்த்தியாக விளங்குபவர் விநாயகர். இவருக்கு மந்திரப்பிரதிஷ்டை எதுவும் தேவையில்லை. ‘பிடிச்சு வைச்சா பிள்ளையார்’ என்று இதனைச் சொல்வதுண்டு. ஆகமவிதிகள் குறிப்பிடும் விதிமுறைகளை பின் பற்றாமல், எந்த இடத்திலும் இவரை வழிபடலாம். அதனால் தான் விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணால் செய்த பிள்ளையாரை வணங்குகிறோம்.