கவுமாரியம்மன் திருவிழா: கூடலுாரில் அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2018 12:05
கூடலுார், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக கூடலுாரில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வுகள் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி கூடலுாரில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அக்னி சட்டி எடுத்து இங்கு காளியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். வழிநெடுக ரோட்டின் இரு பகுதிகளிலும், பக்தர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர், மோர் வழங்கின. காளியம்மன் கோயில் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் வீரபாண்டி சென்றனர்.