பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலகத்தில் தீமைகள் அழித்து, நன்மைகள் நடக்கவும், வெற்றிகள் கிடைக்கவும், கல்வியையும், செல்வத்தையும் அளிக்க, காளி யாகத்துடன், கால பைரவர் ஹோமம், நேற்று நடந்தது. மேலும், ஏவல், பில்லி சூனியம், செய்வினை விலக, ப்ரித்யங்கரா தேவிக்கு, சிறப்பு காளி ஹோமம், சந்தன அபிஷேகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.