தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை அதிகாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. தேர் அலங்கரிக்கப்பட்டு சன்னதி முன் கொண்டுவரப்படும். 2ம் நாள் கோயில் அருகே உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படும். 3ம் நாள் வீரபாண்டி ஊராட்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் நிறுத்தப்படும். 4ம் நாள் நிலைக்கு கொண்டுவரப்படும். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.