மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, 24 வேலம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற துக்காச்சி குப்பையண்ணசுவாமி கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்களும் வருகின்றனர். கோவில் வளாகம் முன், உயர் மின் கோபுர விளக்கு அமைக்க, கோரிக்கை எழுந்தது. ஈரோடு எம்.பி., தொகுதி நிதி மேம்பாட்டில், 4.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, விளக்கு பொருத்தப்பட்டது. நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. எம்.பி., செல்வக்குமார சின்னையன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.