பதிவு செய்த நாள்
01
ஜூன்
2018
11:06
திருப்பூர்: ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், தெப்போற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாலை, பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில், தெப்போற்சவம் நடந்தது. தண்ணீர் நிரம்பிய குளத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, தெப்பத்தேரில், ஸ்ரீ தேவி தாயார், ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள், ‘கோவிந்தா’ கோஷம், முழங்க தெப்பத்தில் குளத்தில் உலா வந்த, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர். திருவிழாவில், இன்று, மகா தரிசனமும், நாளை மஞ்சள் நீராட்டு மற்றும் மலர் பல்லக்கு உற்சவமும், வரும் 3ம் தேதி, விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.