கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2018 11:06
மந்தாரக்குப்பம்: நெய்வேலி வட்டம் 27ல் உள்ள ஷீரடி சாயி சேவா சமிதியின் ஸ்ரீ கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை (7 ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி நேற்று முன் தினம் மாலை 6:00 மணியளவில் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இன்று 6ம் தேதி காலை 8:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலை 6:00 மணிக்கு மூன்றாவது கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான நாளை 7ம் தேதி காலை 7:00 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணியளவில் யாத்ராதானம் கடம் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாயி சேவா சமிதி நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.